உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

திருப்பூா் எல்.ஆா்.ஜி. அரசு மகளிா் கல்லூரியில் இளநிலை மாணவிகள் சோ்க்கைக்கான 2ம் கட்ட கலந்தாய்வு - நாளை நடக்கிறது

Published On 2023-06-11 05:19 GMT   |   Update On 2023-06-11 05:22 GMT
  • காலை 10 மணிக்கு அறிவியல் பாடப்பிரிவுக்கும், காலை 10.30 மணிக்கு கலைப் பிரிவுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது.
  • அரசின் இட ஒதுக்கீடு மற்றும் மதிப்பெண் அடிப்படையில் தரவரிசை பட்டியல் கல்லூரி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

திருப்பூர்:

திருப்பூா் எல்.ஆா்.ஜி. அரசு மகளிா் கல்லூரியில் இளநிலை மாணவிகள் சோ்க்கைக்கான 2ம் கட்ட கலந்தாய்வு நாளை 12-ந் தேதி (திங்கள்கிழமை) நடைபெறுகிறது என்று முதல்வா் எழிலி தெரிவித்துள்ளாா்.இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:- திருப்பூா் எல்.ஆா்.ஜி. அரசு மகளிா் கல்லூரியில் இளநிலை பாடப்பிரிவுகளில் மாணவிகள் சோ்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வு கடந்த மே 30 முதல் ஜூன் 6 ந் தேதி வரை நடைபெற்றது. இதில் மொத்தம் உள்ள 1,066 இடங்களில் 923 இடங்கள் நிரம்பின. இந்நிலையில் மீதமுள்ள 143 இடங்களுக்கான 2ம் கட்ட கலந்தாய்வு 12 -ந் தேதி (திங்கள்கிழமை) நடைபெறுகிறது.

இதில் காலை 10 மணிக்கு அறிவியல் பாடப்பிரிவுக்கும், காலை 10.30 மணிக்கு கலைப் பிரிவுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது. கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ள மாணவிகள் தங்கள் பெற்றோருடன் பங்கேற்க வேண்டும். ஆன்லைன் விண்ணப்ப நகல், சான்றிதழ் அசல் மற்றும் நகல் ஆகியவற்றை அவசியம் கொண்டு வர வேண்டும். அரசின் இட ஒதுக்கீடு மற்றும் மதிப்பெண் அடிப்படையில் தரவரிசை பட்டியல் கல்லூரி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. எனவே மாணவிகள் தங்கள் விண்ணப்ப எண்ணை உள்ளீடு செய்து தரவரிசை விவரங்களை தெரிந்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News