உள்ளூர் செய்திகள்
உடுமலை சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
- ரத்தின லிங்கேஸ்வரர் கோவிலில் நந்தியம்பகவானுக்கும், அபிஷேகம், அலங்காரம் நடந்தது.
- ரத்தினலிங்கேஸ்வரர் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி, கோவில் பிரகாரத்தில் வீதியுலா வந்தார்.
உடுமலை :
உடுமலையில் பிரதோஷத்தை முன்னிட்டு உடுமலை மற்றும் சுற்றுப் பகுதி சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை வழிபாடு நடந்தது.உடுமலை தில்லை நகர் ரத்தின லிங்கேஸ்வரர் கோவிலில் நந்தியம்பகவானுக்கும், அபிஷேகம், அலங்காரம் நடந்தது.
ரத்தினலிங்கேஸ்வரர் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி, கோவில் பிரகாரத்தில் வீதியுலா வந்தார்.தில்லை நகர் ரத்தின லிங்கேஸ்வரர் கோவிலில், சுவாமிக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் செய்து மலர்கள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.