உள்ளூர் செய்திகள்

ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.

பால் விலையை உயர்த்த கோரி ஆர்ப்பாட்டம்

Published On 2022-10-19 05:14 GMT   |   Update On 2022-10-19 05:14 GMT
  • சேமலைகவுண்டம்பாளையத்தில் உள்ள பால் குளிர்வு நிலையம் முன்பு பால் விலையை உயர்த்தி தரக்கோரி ஆர்பாட்டம் நடைபெற்றது.
  • பாலுக்கு கொள்முதல் விலையை லிட்டருக்கு, பசும்பாலுக்கு ரூ.42-ம், எருமை பாலுக்கு ரூ.51-ம் உடனே வழங்க வேண்டும்.

பல்லடம் :

திருப்பூர் மாவட்டம், பல்லடம் சட்டமன்றத் தொகுதி பொங்கலூர் ஒன்றியம், சேமலைகவுண்டம்பாளையத்தில் உள்ள பால் குளிர்வு நிலையம் முன்பு பால் விலையை உயர்த்தி தரக்கோரி ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தின் போது விவசாயிகள் ஆவின் நிறுவனத்திற்கு வழங்கும் பாலுக்கு கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.10 உயர்த்தி, பசும்பாலுக்கு ரூ.42-ம், எருமை பாலுக்கு ரூ.51-ம் உடனே வழங்க வேண்டும் என கேட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்திற்கு பால் கூட்டுறவு சங்கத்தின் மூத்த உறுப்பினர் பழனிச்சாமி தலைமை தாங்கினார். சேமலைகவுண்டம்பாளையம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் குப்புசாமி மற்றும் முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோரிக்கைகளை விளக்கி தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் ஆர்.குமார், கிளை நிர்வாகி கருங்காலிபாளையம் கே.பாலசுப்பிரமணியம் ஆகியோர் பேசினார்கள். இப்போராட்டத்தில் விவசாயிகள் சின்னச்சாமி, பழனிச்சாமி, ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கை முழக்கமிட்டனர்.

Tags:    

Similar News