உள்ளூர் செய்திகள்

வானதி சீனிவாசன். 

அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான நடவடிக்கைக்கும் மத்திய அரசிற்கும் சம்பந்தமில்லை - வானதி சீனிவாசன் பேட்டி

Published On 2023-06-15 07:28 GMT   |   Update On 2023-06-15 07:28 GMT
  • அமலாக்கத்துறை அதிகாரிகள் அவர்களது பணியை செய்கிறார்கள்.
  • செந்தில் பாலாஜி அதிமுகவில் இருந்தபோது செய்த ஊழல் பட்டியலை வெளியிட்டனர்.

பல்லடம் :

பாரதிய ஜனதா கட்சி தேசிய மகளிர் அணி தலைவியும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் பல்லடத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான அமலாக்கத்துறையின் நடவடிக்கைக்கும் மத்திய அரசிற்கும் சம்பந்தமில்லை. அமலாக்கத்துறை அதிகாரிகள் அவர்களது பணியை செய்கிறார்கள். இதே திமுக அரசு எதிர்க்கட்சியாக இருக்கும்போது, செந்தில் பாலாஜி அதிமுகவில் இருந்தபோது செய்த ஊழல் பட்டியலை வெளியிட்டனர். ஊழல் செய்தவர் இன்று திமுக கட்சியில் சேர்ந்து விட்டதால் அதை மறைத்து விட்டீர்கள், மறந்து விட்டீர்கள்.எதையும் சந்திக்க தயார் என சவால் விட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி திடீரென்று அன்று இரவே எப்படி உடல் நிலை சரியில்லாமல் போனார் என்பது எங்களுக்கு தெரியவில்லை.

வழக்கை அவர்கள் சந்தித்து தான் ஆக வேண்டும். விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News