திருப்பூரில் தங்கமயில் ஜூவல்லரியின் புதுப்பிக்கப்பட்ட ஷோரூம் திறப்பு விழா நாளை நடக்கிறது
- திருப்பூர் குமரன் சாலையில் புதுப்பிக்கப்பட்ட தங்கமயில் ஜூவல்லரி ஷோரூம் திறப்பு விழா நடக்கிறது.
- தங்கமயில் ஜுவல்லரி கடந்த 30 ஆண்டுகளாக தங்க நகை விற்பனையில் தனக்கென தனியொரு அடையாளத்தை பதித்துள்ளது.
திருப்பூர் :
திருப்பூர் குமரன் சாலையில் புதுப்பிக்கப்பட்ட தங்கமயில் ஜூவல்லரி ஷோரூம் திறப்பு விழா நாளை 2-ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை) காலை 10-30மணிக்கு நடக்கிறது. இது குறித்து அந்நிறுவனத்தின் நிர்வாகிகள் கூறியதாவது:-
தங்கமயில் ஜுவல்லரி கடந்த 30 ஆண்டுகளாக தங்க நகை விற்பனையில் தனக்கென தனியொரு அடையாளத்தை பதித்துள்ளது. இன்று 25 லட்சம் வாடிக்கையாளர்களுடன் தமிழகம் முழுவதும் கிளைகளை பரப்பி இந்த மண்ணி ன் மனம் கவர்ந்த ஒரு ஜுவல்லரியாக மாறியிருக்கிறது.
ஆடை உலகம்திருப்பூர் விரும்பும் ஆபரண உலகமாக திகழும் தங்கமயில் ஜுவல்லரி மிகச் சிறந்த நகைகளை மிகக்குறைந்த சேதாரத்தில் வழங்கி வருகிறது. இன்று திருப்பூரின் மிக முக்கிய ஜுவல்லரிகளின் தேர்வுகளில் முதலாவதாக தங்கமயில் மாறியிருக்கிறது. திருப்பூர் மக்கள் எங்களுக்கு நல் ஆதரவை என்றும் அளித்து வருவது எங்களுக்கு மிக்க மகிழ்ச்சியைத்தருகிறது. இந்த அன்பிற்கும், ஆதரவிற்கும் பெருமை சேர்க்கும் விதமாக எங்களுடைய திருப்பூர் தங்கமயில் ஜுவல்லரி ஷோரூம் முற்றிலும் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
புதுப்பிக்கப்பட்ட இந்த ஷோரூமின் திறப்பு விழா நாளை 2-ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணியளவில் நடைபெறுகிறது. திறப்பு விழாவின் மிக முக்கிய அம்சமாக தங்கமயில் ஜுவல்லரி ஷோரூமிற்குள்ளேயே தனது பிரத்தியேக பிரைடல் ஸ்டோரை அறிமுகப்படுத்தி அதில் தங்க மாங்கல்யம்' என்னும் தனித்துவமான திருமண நகை கலெக்ஷன்களையும் அறிமுகப்படுத்துகிறது. மணமகளுக்கு ஏற்ற தங்க, வைர ஆபரணங்கள், இரத்தினக் கற்களில் அமைந்த நகைகள், வெள்ளி நகைகள் என்று அனைத்திலும் விதவிதமான திருமண நகைகளின் கலெக்ஷன்களையும், டிசைன்களையும் இங்கே ஒரே இடத்தில் வாங்கிடலாம்.
இதுவரை இல்லாத அளவு எண்ணிலடங்கா திருமண நகை கலெக்ஷன்கள், டிசைன்கள், பிரைடல் செட் என்று தங்கமயில் ஜுவல்லரி தனித்துவமான மற்றும் மிக பிரம்மாண்ட தங்க மாங்கல்யம் கலெக்ஷன்களை வடிவமைத்திருப்பது மிகவும் கவனித்தக்க ஒன்று. இந்த கலெக்ஷன்கள் அனைத்தும் எங்கள் கை தேர்ந்த கைவினை கலைஞர்களின் விஷேச அனுபவத்தில் டிசைன் செய்யப்பட்டு தங்க மாங்கலயம் கலெக்ஷன்களுக்காகவே தனித்துவமாக பார்த்துப் பார்த்து உருவான பொக்கிஷமான படைப்பு.
ஆண்டிக், நகாஸ்,ைலட்வெயிட், மார்டன், டிசைனர் என்று அனைத்திலும் அற்புதமான படைப்புகளை உருவாக்கியிருக்கிறோம். இனி திருப்பூரின் ஒவ்வொரு திருமணத்தின் தொடக்கமும் தங்கமயில் ஜுவல்லரியில் தான் ஆரம்பமாகும். அவரவர் வீட்டு முறைப்படி, அவரவர் பழக்கவழக்கங்களின்படி பண்பாடு மற்றும் கலாச்சாரம் இவற்றை பிரதிபலிக்கும் அற்புதமான திருமண நகைகளை அளிப்பதில் முன்னோடியான தங்கமயிலின் இந்த பிரம்மாண்ட தொடக்கத்தில் கலந்துகொள்ள அனைவரையும் வரவேற்கிறோம்.
தரமான சேவை அளிக்க வேண்டும். ஒவ்வொரு தயாரிப்பையும் நியாயமான விலைக்கு வழங்க வேண்டும், குறுகிய கால வளர்ச்சியாக இல்லாமல் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையோடு நீண்ட நெடிய காலம் பயணிக்க வேண்டும். இது தான் எங்கள் இலக்கு .அதற்கான சரியான திட்டமிடுதல், வழிகாட்டுதல்கள், சிறப்பான செயல்முறைகள் என அனைத்தையும் நாங்கள் உருவாக்கி அதன்படி நடந்துவருகிறோம். அதனால்தான் இன்று பங்குச்சந்தையிலும் நாங்கள் தடம்பதித்து வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெற்றிருக்கிறோம் . இவ்வாறு அவர்கள் கூறினர்.