உள்ளூர் செய்திகள்

ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற காட்சி.

திருப்பூரில் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Published On 2023-03-02 11:05 GMT   |   Update On 2023-03-02 11:05 GMT
  • தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.
  • அரசாணை எண் 152 மற்றும் 139ஐ ரத்து செய்ய வேண்டும்.

திருப்பூர் :

தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் உள்ளிட்ட அரசு துறை மற்றும் அரசு கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களில் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து வரும் அனைத்து ஒப்பந்த மற்றும் தற்காலிக பணியாளர்களையும் பணி நிரந்தரம் செய்வது குறித்து பரிசீலிக்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் , தேர்தல் வாக்குறுதிக்கு மாறாக தொழிலாளர்களின் வேலை மற்றும் ஊதியத்தை பறிக்கும் தமிழ்நாடு அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் அரசாணை எண் 152 மற்றும் 139ஐ ரத்து செய்ய வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.

பகுதிநேர ஊழியர்களை முழு நேர பணியாளர்களாக அறிவித்திட வேண்டும் , நிரந்தர தொழிலாளர்களை அவர்கள் பணிபுரியும் இடத்திலிருந்து வேறு வேலைக்கு மாற்றக்கூடாது, தூய்மை பணியாளர்களின் சர்வீஸ் பட்டியல் அடிப்படையில் பதவி உயர்வு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகராட்சி ஆணையாளரிடம் மனு அளித்தனர். 

Tags:    

Similar News