செல்போன் கடையில் பணம் திருடிய வாலிபர் கைது
- டேபிளில் இருந்த ரூ .3 ஆயிரம் காணாமல் போனது தெரியவந்தது.
- போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தார்.
வெள்ளகோவில் :
வெள்ளகோவில் அருகேயுள்ள முத்தூர் மேட்டுகடை கடைவீதி தொட்டியபாளையத்தை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 25) .இவர் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவர் கடையின் கண்ணாடி கதவை பூட்டிவிட்டு வீட்டிற்கு சாப்பிட சென்று இருந்தார். திரும்பி வந்து பார்த்தபோது கண்ணாடி கதவு உடைக்கப்பட்டு டேபிளில் இருந்த ரூ .3 ஆயிரம் காணாமல் போனது தெரியவந்தது. இது குறித்து கார்த்திக் வெள்ளகோவில் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அர்ஜுனன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தார். நேற்று வியாழக்கிழமை காலை முத்தூர் பஸ் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த ஓரு நபரை பிடித்து விசாரித்த போது, அந்த நபர் செல்போன் கடையில் ரூ.3 ஆயிரம் திருடியது தெரியவந்தது.
அவர் ஈரோடு மாவட்டம், நசியனூர் அருகே உள்ள கரைவாய்க்கால் புதூர் பகுதியைச் சேர்ந்த வினோத்கு மார் (28) என்பது தெரியவந்தது. வினோத்குமாரை கைது செய்து காங்கேயம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.