வந்தவாசியில் பொதுமக்கள் திடீர் மறியல்
- கோமுட்டி குளத்தை சுத்தம் செய்யாததால் ஆத்திரம்
- அண்டாவில் சாமி தீர்த்தவாரி நடந்தது
வந்தவாசி:
வந்தவாசி ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா முன்னிட்டு நகராட்சி கட்டுப்பாட்டில் இருக்கும் கோமுட்டி குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நேற்று நடைபெற உள்ள நிலையில் கோமுட்டி குளத்தை சுத்தம் செய்து தர வேண்டும் என்று கடந்த 10 நாட்களுக்கு முன்பு பொதுமக்கள் நகராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்த நிலையில் நகராட்சி அதிகாரிகள் குளத்தை சுத்தம் செய்வதாக தெரிவித்தனர்.
இந்த நிலையில் ரங்கநாத பெருமாள் சுவாமி ஊர்வலமாக சென்று கோமுட்டி குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியை நடைபெறுவதற்காக சென்றபோது குளம் முழுவதும் சுத்தம் செய்யாமல் துர்நாற்றம் வீசியது.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து வந்தவாசி திண்டிவனம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பிறகு சாலை மறியலை கைவிட்டனர்.
இந்த நிலையில் குளத்தை சுத்தம் செய்யாததால் கோவில் பட்டாச்சா ரியார்கள் சிறிய அண்டாவில் வைத்து தீர்த்தவாரி நிகழ்ச்சி செய்யும் அவலம் ஏற்பட்டது. இதையடுத்து சாமிக்கு சிறப்பு அபிஷே கங்கள் செய்யப்பட்டு சிறிய அண்டாவை வைத்து தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.
நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து நகராட்சி கட்டுப்பாட்டில் இருக்கும் கோமுட்டி குளத்தை சுத்தம் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.