கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்கு செல்ல மீண்டும் அனுமதி சுற்றுலா பயணிகள் உற்சாகம்
- காலாண்டுதேர்வு விடுமுறை மற்றும் ஆயுதபூஜை விடு முறையையொட்டி சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்து வருகின்றனர்.
- பேரிஜம் வனப்பகுதிக்கு செல்ல மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசி யான கொடைக்கானலுக்கு கடந்த சில நாட்களாக காலாண்டுதேர்வு விடுமுறை மற்றும் ஆயுதபூஜை விடு முறையையொட்டி சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்து வருகின்றனர். குணாகுகை, மோய ர்பாயிண்ட், பைன்மரக்காடு கள், பில்லர்ராக், பிரைய ண்ட் பூங்கா, படகுகுழாம் என அனைத்து சுற்றுலா இடங்களிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
ஏரியில் படகுசவாரி செய்தும், ஏரிச்சாலையில் சைக்கிள் மற்றும் குதிரை சவாரி செய்தும் மகிழ்ந்து வருகின்றனர். கொடை க்கானலில் தற்போது அவ்வப்போது சாரல்மழை பெய்து வெப்பத்தின் தாக்கமே இல்லாத அளவிற்கு இதமான சூழல் நிலவி வருகிறது.
சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் ஹோட்டல், விடுதிகள், சாலையோர கடைகள், வாகனஓட்டுனர்கள், வழிகாட்டிகள் ஆகியோரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் குளித்து அதனை புகைப்படம் எடுத்து மகிழ்ந்து வருகின்ற னர். மக்கள் கூட்டம் அதிகரிப்பால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டுள்ளது.
கொடைக்கானல் வனத்து றை கட்டுப்பாட்டில் உள்ள பேரிஜம் ஏரி பகுதிக்கு செல்ல கடந்த வாரம் தடைவிதிக்கப்பட்டி ருந்தது. இங்கு தொப்பி தூக்கு ம்பாறை, பேரிஜம் ஏரியின் கழுகுப்பார்வை, அமைதி ப்பள்ளத்தாக்கு, மதிகெட்டா ன்சோலை ஆகியவை சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்பி பார்க்கும் இட மாகும்.
இப்பகுதியில் யானைகள் கூட்டம் கூட்டமாக சுற்றி வந்ததால் வனத்துறை சார்பில் தற்காலிக தடை விதிக்கப்பட்டது. தற்போது அந்த யானைகள் முற்றிலும் அங்கிருந்து அகற்றப்பட்டு விட்டது. இதனால் பேரிஜம் வனப்பகுதிக்கு செல்ல மீண்டும் அனுமதி வழங்கப்ப ட்டுள்ளது. எனவே சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து பேரிஜம் ஏரியில் குவிந்து வருகின்றனர்.