- ஸ்ரீவில்லிபுத்தூரில் பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
- இதற்கான ஏற்பாடுகளை வருவாய் ஆய்வாளர்கள் ஆனந்தகிருஷ்ணன், ரமேஷ், ஜோதி ஆகியோர் செய்திருந்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு சொந்தமான திருமுக்குளத்தில் வருவாய் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. சார் ஆட்சியர் பிருத்திவிராஜ் தலைமை தாங்கினார். குளத்தில் சிக்கி ஒருவர் தத்தளிப்பது போன்றும், அவரை தீயணைப்பு துறையினர் ரப்பர் படகில் சென்று மீட்டு வருவது போன்றும் ஒத்திகை காண்பித்தனர்.
தீயணைப்பு துறை நிலைய அலுவலர்கள் அந்தோணி, சுந்தரகுருசாமி, மாவட்ட கலால் உதவி ஆணையர் சிவகுமார், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் ராமசுப்பிரமணியன், தனி வட்டாட்சியர் ராமதாஸ், நகராட்சி ஆணையாளர் ராஜமாணிக்கம், சிவகாசி சுகாதாரத்துறை இயக்குநர் கலுசிவலிங்கம், வட்டார போக்குவரத்து அலுவலர் இளங்கோ, வட்ட வழங்கல் அலுவலர் பாலகிருஷ்ணன், நகர் நல அலுவலர் கவிப்பிரியா, ஆய்வாளர் சந்திரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை வருவாய் ஆய்வாளர்கள் ஆனந்தகிருஷ்ணன், ரமேஷ், ஜோதி ஆகியோர் செய்திருந்தனர்.