உள்ளூர் செய்திகள்

தூய்மை நகரத்திற்கான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.

தூய்மை நகரத்திற்கான உறுதிமொழி

Published On 2022-06-25 08:14 GMT   |   Update On 2022-06-25 08:14 GMT
  • தூய்மை நகரத்திற்கான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
  • திருமண மண்டபங்கள், சமுதாய கூடங்களில், லாட்ஜ்களில் சேரும் குப்பைகளை அவர்களே அழித்துவிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

பாலையம்பட்டி

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்கம் தொடங்கப்பட்டு தீவிர தூய்மை பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று காலை நகராட்சியில் உள்ள 36 வார்டுகளிலும் தூய்மை நகரத்திற்கான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.

ஆணையாளர் அசோக்குமார் தலைமையில், நகர் நல அலுவலர் ராஜ நந்தினி, துணைத் தலைவர், பழனிசாமி முன்னிலையில், சுகாதார அதிகாரிகள், பொதுமக்கள் ''எனது நகரத்தை தூய்மையாக வைத்திருப்பது எனது கடமை, தூய்மை பணிகளுக்கு நேரத்தை ஒதுக்குவேன், வீட்டிலேயே குப்பைகளை தரம் பிரித்து தூய்மை பணியாளரிடம் ஒப்படைப்பேன்'' என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். மேலும் அந்த நிகழ்ச்சியில் திருமண மண்டபங்கள், சமுதாய கூடங்களில், லாட்ஜ்களில் சேரும் குப்பைகளை அவர்களே அழித்துவிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

Tags:    

Similar News