உள்ளூர் செய்திகள்

ஆக்கிரமிப்புகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றிய காட்சி.

சேத்தூர் மெயின்ரோட்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Published On 2023-01-28 06:58 GMT   |   Update On 2023-01-28 06:58 GMT
  • ராஜபாளையம் அருகே சேத்தூர் மெயின்ரோட்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
  • 4, 11 வார்டுகள் மற்றும் ஆசாரிமார் தெரு செல்லும் பாதை அருகில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

ராஜபாளையம்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் தேர்வுநிலைப் பேரூராட்சியில் ஆக்கிர மிப்புகள் அகற்றும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றது.சேத்தூர் வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகள் பேரூராட்சி நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து பஸ் நிலையம் முன்பு தொடங்கி மதுரை-தென்காசி ரோடான மெயின்ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை முற்றிலுமாக ஜே.சி.பி. எந்திரம் கொண்டு அகற்றி னார்கள்.

மேலும் 4, 11 வார்டுகள் மற்றும் ஆசாரிமார் தெரு செல்லும் பாதை அருகில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

சேத்தூர் பேரூராட்சி மன்ற தலைவர் பாலசுப்பிரமணியன், வருவாய் ஆய்வாளர் காளீஸ்வரி, கிராம நிர்வாக அலுவலர்கள் மாரிமுத்து, முத்துலட்சுமி, நில அளவை யர் காளிமுத்து, போலீஸ் இன்ஸ்ெபக்டர் ஆனந்த குமார், சப்-இன்ஸ்ெபக்டர் பெருமாள்சாமி, சேத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடகோபு ஆகியோர் நேரடி கண்காணிப்பில், பேரூராட்சி இளநிலை உதவியாளர் அசோக்குமார், வரிவசூலர் பலராமன் மற்றும் அலுவலக பணியாளர்கள் ஆக்ரமிப்புகளை அகறற்றும் பணியில் ஈடுபட்டனர்.சேத்தூரில் நீண்ட இடை வெளிக்கு பிறகு கனரக வாகனங்கள் அதிகம் வந்து செல்லக்கூடிய மெயின் ேராட்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News