உள்ளூர் செய்திகள்

சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியில் நடைபெற்ற பங்குச் சந்தை பரிவர்த்தனை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களை படத்தில் காணலாம்.

பங்குச் சந்தை பரிவர்த்தனை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

Published On 2023-07-09 07:17 GMT   |   Update On 2023-07-09 07:17 GMT
  • பங்குச் சந்தை பரிவர்த்தனை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
  • வணிகவியல் துறை மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

தாயில்பட்டி

விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியின் ஜேசீஸ் விங் சார்பில் பங்குச் சந்தை பரிவர்த்தனை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல் லூரி முதல்வர் முனை–வர் பெ.கி.பாலமுருகன் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார்.

கல்லூரி இளங்கலை வணிகவியல் துறை தலைவர் முனைவர் மீ.குருசாமி வாழ்த்துரை வழங்கினார். அப்போது அவர் பேசுகை–யில், மாணவர்களுக்கு சேமிப்பு பற்றிய நன்மைகளையும், அதனால் அடையும் எதிர்கால பலன்கள் குறித் தும் விரிவாக எடுத்துரைத் தார்.

இதில் சிவகாசி பட்டயக் கணக்காளரும், ஜே.சி.ஐ. செயலாளருமான ஜே.சி.அருள்மொழி வர்மன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில், பங்குச்சந்தை முதலீடு, பங்குச்சந்தை பரிவர்த்தனைகள், இந்திய பங்குச் சந்தை–யின் செயல்பாடுகள் குறித்து விரிவாக விளக்கினார். ேமலும் மாணவர்களின் பங்குச் சந்தை பரிவர்த்தனைகள் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கமும், உரிய பதிலும் அளித்தார்.

முன்னதாக ஜே.சி.சி.கிரிதரன் வரவேற்றார். நிகழ்ச்சி நிறைவில் கல்லூரி ஜூனியர் ஜேசீஸ் விங் ஒருங்கிணைப்பாளரும், வணிகவியல் துறை பேராசிரியருமான முனை–வர் அ.பாபு பிராங்கிளின் நன்றி கூறி நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்தி–ருந்தார். இதில் 240 வணிகவி–யல் துறை மாணவர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

Tags:    

Similar News