துப்புரவு பணியாளர்கள் முற்றுகை போராட்டம்
- விருதுநகர் நகராட்சி அலுவலகம் முன்பு துப்புரவு பணியாளர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
- பெண்கள் உள்பட 63 பேர் கைது செய்யப்பட்டனர்.
விருதுநகர்
விருதுநகர் நகராட்சியில் 70-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகர் நகராட்சி அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெறும் என துப்புரவு பணியாளர்கள் அறிவித்தி ருந்தனர். அதன்படி இன்று காலை பெண்கள் உட்பட 63 துப்புரவு பணியாளர்கள் விருதுநகர் நகராட்சி அலு வலகம் முன்பு திரண்டனர்.
ஒப்பந்த முறை துப்புரவு பணியை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகை போராட்டம் நடந்தது. சி.ஐ.டி. யு. நகர அமைப்பாளர் பாலமுருகன் தலைமை தாங்கினார். துப்புரவு பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் விஜயபாண்டி முன்னிலை வகித்தார்.
போராட்டம் குறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனாலும் துப்புரவு பணியாளர்கள் தொடர்ந்து நகராட்சி அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் கலைந்து செல்லுமாறு எச்சரித்தும் போராட்டம் நீடித்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.