உள்ளூர் செய்திகள்

மறியலில் ஈடுபட்ட பெண்கள்.

வானூர் அருகே இன்று 100-நாள் வேலை சரியாக வழங்காததால் பெண்கள் சாலை மறியல்

Published On 2023-07-13 09:42 GMT   |   Update On 2023-07-13 09:42 GMT
  • பெண்கள் மகாத்மா காந்தி 100 -நாள் வேலை திட்டத்தில் சேர்ந்து வேலை பார்த்து வந்தனர்.
  • பணியில் இருந்த ஊராட்சி செயலாளர் உங்களுக்கு இன்று வேலை இல்லை நாளை வாருங்கள் என்று கூறி அனுப்பியுள்ளார்.

விழுப்புரம்: 

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே காட்ராம்பாக்கம் பகுதியில் உள்ள பெண்கள் மகாத்மா காந்தி 100 -நாள் வேலை திட்டத்தில் சேர்ந்து வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில் அதே பகுதியில் உள்ள 5 மற்றும் 6-வது வார்டில் உள்ள பெண்களுக்கு சரிவர மகாத்மா காந்தி ஊரக வேலை திட்டத்தில் வேலை கொடுக்கவில்லை. இதனை யடுத்து இன்று காலை அந்த பகுதி 5,6-வது வார்டு பெண்கள் அனைவரும் சேர்ந்து ஊரக வேலைக்கு சென்றுள்ளனர். அப்போது பணியில் இருந்த ஊராட்சி செயலாளர் உங்களுக்கு இன்று வேலை இல்லை நாளை வாருங்கள் என்று கூறி அனுப்பியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் வானூர்- காட்ராம்பாக்கம் சாலையில் திடீரென மறியல் செய்தனர். இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள், பிடிஓக்கள் இங்கு வந்து எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தும் வரை சாலை மறியலை கைவிட மாட்டோம் என்று கூறி பெண்கள் மறியலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அந்த பகுதி முழுவதும் பரபரப்பாக உள்ளது.

Tags:    

Similar News