பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற பெண் கல்வி அவசியம்
- தஞ்சாவூர் தெற்கு மாவட்டம் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா கருத்தரங்கம் நடந்தது.
- பெண்கள் தலைமையிலான புராதான பொதுவுடைமை சமுதாயம் தான் முதலில் தோன்றியது.
தஞ்சாவூர்:
இந்திய மாதர் தேசிய சம்மேளனம் தஞ்சாவூர் தெற்கு மாவட்டம் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா கருத்தரங்கம் நடைபெற்றது. மாதர் சங்க மாவட்ட செயலாளர் விஜயலட்சுமி தலைமை வகித்தார்.
கருத்தரங்கத்தில் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மாநிலத் தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பத்மாவதி சிறப்புரையாற்றினார்.
தொடர்ந்து தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் தஞ்சை மாநகர செயலாளர் எழுத்தாளர் அகிலா கிருஷ்ணமூர்த்தி பேசும்போது,
மனித குலத்தில் முதன் முதலாக சமூகம் உருவானபோது பெண்கள் தலைமையிலான புராதான பொதுவுடைமை சமுதாயம் தான் முதலில் தோன்றியது.
மனித குல வரலாற்றில் மனித கூட்டத்தை தலைமை யேற்று வழி நடத்தியவர்கள் பெண்கள் தான்.
இத்தகைய பொதுவுடமை அரசை வழி நடத்தியவர்கள் பெண்கள் தான் என்பதில் நாம் பெருமை கொள்ள வேண்டும். பொருளாதாரத்தில் பெண்கள் தன்னிறைவு பெறுவது என்பது கல்வி பயில்வதனால் மட்டுமே முடியும்.
ஆகவே பெண்கள் கல்வி மிக, மிக முக்கியமானது. ஒவ்வொரு பெண் குழந்தையும் கல்வியறிவு பெறுவதற்கு பள்ளிக்கு அனுப்ப வேண்டும் . உயர் படிப்பு வரை படிப்பதற்கு உற்சாகப்படுத்த வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் தஞ்சாவூர் மாநகர செயலாளர் ராஜலட்சுமி, ஒன்றிய செயலாளர் சிவகாசி , மல்லிகா, மதுக்கூர் ஒன்றிய செயலாளர் ஜெனிதா, பட்டுக்கோட்டை செயலாளர்கள் ஜானகி, சகுந்தலா, சேதுபாவாசத்திரம் செயலாளர் கனகம், ஒரத்தநாடு செயலாளர் எலிசபெத், திருவோணம் செயலாளர் தவமணி, பேராவூரணி செயலாளர் கலைச்செல்வி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக மாவட்ட தலைவர் தனசீலி அனைவரையும் வரவேற்று பேசினார். முடிவில் மாவட்ட பொருளாளர் ஸ்ரீதேவி நன்றி கூறினார்.