null
ஆதார் கார்டு புதுப்பிக்கவில்லையா... டிசம்பர் 14-ந்தேதி வரை இலவசம்...
- ஆதார் கார்டு வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களது ஆதாரை புதுப்பித்து கொள்ள வேண்டும்
- ஆன்லைன் மூலம் முகவரியை மாற்றிக்கொள்ளலாம்.
ஆதார் கார்டு இந்திய மக்களின் அடையாளமாக இருக்கிறது. வங்கி கணக்கு தொடங்குவது முதல் பான் கார்டு, டிரைவிங் லைசென்சு உள்ளிட்ட அரசின் அனைத்து சேவைகளை பெற ஆதார் கார்டு கட்டாயம் ஆகும். எனவே அனைவரும் தற்போது ஆதார் கார்டு வைத்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் ஆதார் கார்டு வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களது ஆதாரை புதுப்பித்து கொள்ள வேண்டும் என்று ஆதார் ஆணையம் அறிவுறுத்துகிறது.
அதாவது அதில் புதுப்பிப்பு என்பது பலரும் தங்களது முகவரி மற்றும் செல்போன் எண்களை மாற்றி இருப்பார்கள். முகங்கள் மாறி இருக்கும். ஆனால் ஆதாரில் பழைய புகைப்படங்கள் இருக்கும். அதேபோல் கைரேகை மாறி இருந்தால், அவர்களால் ரேஷன் கடை, வங்கிகள் மற்றும் சிம்கார்டு வாங்கும் இடங்களில் சுயசான்று செய்வதில் பிரச்சனை இருக்கும்.
இந்த பிரச்சனைகளை தவிர்க்கதான் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆதார் புதுப்பிக்க வேண்டும் என்று ஆதார் ஆணையம் கூறுகிறது. அதற்காக 10 ஆண்டுகள் ஆன பிறகு சம்பந்தப்பட்டவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். அவர்கள் அருகில் உள்ள ஆதார் மையங்களில் புதுப்பிக்கும் பணியினை மேற்கொள்ளலாம். அப்போது புகைப்படங்கள், கைரேகைகளை புதிதாக பதிவு செய்து கொள்ளலாம்.
ஆதார் கார்டுகளை நாளை மறுதினம் வரை (செப்டம்பர் 14-ந்தேதி) இலவசமாக புதுப்பித்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. அதிகாரப்பூர்வ இ-சேவை மையம், தாலுகா அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் இலவசமாக புதுப்பித்துக் கொள்ளலாம். செப்டம்பர் 14-ந்தேதிக்குப்பின் பணம் செலுத்த வேண்டியிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் செப்டம்பர் 14-ந்தேதி வரை இலவசமாக அப்டேட் செய்து கொள்ளலாம் என்ற சலுகை தற்போது டிசம்பர் 14-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் டிசம்பர் 14-ந்தேதி வரை இலவசமாக முகவரி போன்ற மாற்றங்களை செய்து கொள்ளலாம்.
ஆன்லைன் மூலம் முகவரியை மாற்றிக்கொள்ளலாம். இதற்கு 50 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.