இந்தியா
ஜார்க்கண்ட்டில் கோர விபத்து: 5 பேர் பலி
- சாலை தடுப்பு நடுவே நின்று கொண்டிருந்த டிரக் மீது திடீரென கார் வேகமாக பின்னால் மோதியது.
- ஒருவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜார்க்கண்ட் மாநிலம் போக்ரா மாவட்டத்தில் போக்ரா-ராம்கார் தேசிய நெடுஞ்சாலையில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் 8 பேர் பயணம் செய்தனர்.
அப்போது சாலை தடுப்பு நடுவே நின்று கொண்டிருந்த டிரக் மீது திடீரென கார் வேகமாக பின்னால் மோதியது.
இதில் காரில் பயணம் செய்த 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த பெண் மற்றும் குழந்தை உட்பட 3 பேர் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
அதில் ஒருவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். விபத்து சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரில் பயணம் செய்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.