இந்தியா
அல்லு அர்ஜூன் கைதை கண்டிக்கிறேன்- ரோஜா ஆவேசம்
- தேசிய விருது பெற்ற நடிகரை போலீசார் நடத்திய விதம் பல சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.
- கடந்த புஷ்கரத்தின் போது முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு வந்ததில் 11 பேர் உயிரிழந்தனர்.
திருப்பதி:
ஆந்திர முன்னாள் மந்திரி நடிகை ரோஜா அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நடிகர் அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டதை வன்மையாகக் கண்டிக்கிறேன். எந்தவொரு படத்திற்கும் நடிகர்கள் தங்கள் படத்தை விளம்பரப்படுத்த திரையரங்குகளுக்குச் செல்வது ஒரு தொழில் பாரம்பரியம். இது ஒரு குற்றமா? தேசிய விருது பெற்ற நடிகரை போலீசார் நடத்திய விதம் பல சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.
கடந்த புஷ்கரத்தின் போது முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு வந்ததில் 11 பேர் உயிரிழந்தனர். தவறு என்றால் அதுவும் தவறுதான். சந்திரபாபு நாயுடுவை கைது செய்ய ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வலியுறுத்துகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.