பா.ஜ.க. பூத் கமிட்டி உறுப்பினர் மர்ம மரணம்- பஞ்சாயத்து தேர்தல் விரோதத்தில் கொலையா?
- பஞ்சாயத்து தேர்தலையொட்டி பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது.
- புருலியா மாவட்டம் மோடோ பகுதியில் பாரதியஜனதா தலைவர் ஒருவர் பிணமாக கிடந்த சம்பவம் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
மேற்கு வங்காள மாநிலத்தில் வருகிற 8-ந்தேதி பஞ்சாயத்து தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளை அம்மாநில கவர்னர் ஆனந்த்போஸ் நேரில் சென்று பார்வையிட்டார். வன்முறையை தடுக்க மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் புருலியா மாவட்டம் மோடோ பகுதியில் பாரதியஜனதா தலைவர் ஒருவர் பிணமாக கிடந்த சம்பவம் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது. அவரது பெயர் பன்கிம் ஹன்ஸ்டா. இவர் அப்பகுதியில் பா.ஜ.க. பூத் கமிட்டி உறுப்பினராக செயல்பட்டு வந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது மர்மமாக உள்ளது.பஞ்சாயத்து தேர்தல் முன்விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாமா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. அவரது உடலை போலீசார் கைப்பற்றி மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பரிசோதனை முடிவில் தான் அவர் எப்படி இறந்தார் என்பது தெரியவரும்.