இந்தியா

ஜெயிலர் படத்தின் Tiger Ka Hukum பாடலை பயன்படுத்தி மோடியின் எடிட் வீடியோவை வெளியிட்ட பாஜக

Published On 2024-11-23 13:18 GMT   |   Update On 2024-11-23 13:18 GMT
  • மகாராஷ்டிரா தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது.
  • மோடியின் எடிட் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஜெயிலர் படத்தின் Tiger Ka Hukum பாடலை பயன்படுத்தி மோடியின் எடிட் வீடியோவை வெளியிட்ட பாஜக

மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

288 சட்டமன்றத் தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிராவுக்கு கடந்த நவம்பர் 20 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. மகாயுதி [பாஜக - ஷிண்டே சிவசேனா - அஜித் பவார் என்சிபி] மற்றும் மகா விகாஸ் அகாதி [ காங்கிரஸ் - உத்தவ் சிவசேனா - சரத் பவார் என்சிபி] இடையே கடுமையான போட்டி நிலவியது.

பெரும்பான்மைக்கு 145 இடங்கள் வேண்டியிருக்கும் நிலையில் தற்போதைய வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி பாஜக [ மகாயுதி] கூட்டணி 231 இடங்களில் முன்னிலை பெற்று மகாராஷ்டிராவில் ஆட்சியை தக்கவைத்துள்ளது.

இந்நிலையில் மகாராஷ்டிரா தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றதை ஒட்டி ஜெயிலர் படத்தின் Tiger Ka Hukum இந்தி பாடலை பயன்படுத்தி பிரதமர் மோடியின் எடிட் வீடியோவை பாஜக தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags:    

Similar News