null
திடீர் உடல்நலக் குறைவு.. பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே. அத்வானி மருத்துவமனையில் அனுமதி
- அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- தொடர்ச்சியாக மருத்துவர்கள் கண்காணிப்பிலேயே உள்ளார்.
பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே. அத்வானிக்கு நேற்றிரவு திடீர் உல்நலக் குறைவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், அவர் தொடர்ச்சியாக மருத்துவர்கள் கண்காணிப்பிலேயே உள்ளார்.
1942 ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ்.-இல் தன்னை இணைத்துக் கொண்ட அத்வானி 1986 முதல் 1990 பிறகு 1993 முதல் 1998 மற்றும் 2004 முதல் 2005 ஆகிய காலக்கட்டங்களில் பா.ஜ.க.வின் தேசிய தலைவராக பதவி வகித்துள்ளார்.
மத்தியில் கிட்டத்தட்ட மூன்று முறை ஆட்சியமைக்க தவறிய பா.ஜ.க. 1999-இல் ஆட்சி பொறுப்பேற்ற காலக்கட்டத்தில் எல்.கே. அத்வானி வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில் முதல் உள்துறை அமைச்சராக தேர்வானார். பிறகு இவர் துணை பிரதமராகவும் பதவி வகித்தார்.
பிறகு 2009 ஆம் ஆண்டு தேர்தலில் எல்.கே. அத்வானி பாராளுமன்றத்தின் எதிர்கட்சி தலைவராக பதவி வகித்தார்.