இந்தியா

மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்தது - மோடி

Published On 2024-04-08 12:07 GMT   |   Update On 2024-04-08 12:07 GMT
  • மணிப்பூரில் மைதேயி மற்றும் குகி இரு சமூகத்தினருக்கு இடையே உருவான மோதல் பெரும் கலவரமாக வெடித்தது
  • மணிப்பூர் வன்முறையில் இதுவரை 160-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்

அசாம் ட்ரிப்யூன் நாளிதழுக்கு பிரதமர் மோடி பேட்டி அளித்துள்ளார்.

அதில், மணிப்பூர் கலவரத்தின்போது தக்க நேரத்தில் இந்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் மற்றும் மாநில அரசின் முயற்சிகளால் அம்மாநிலத்தின் சூழலில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மேலும், "மணிப்பூரில் கலவரம் உச்சகட்டத்தை எட்டிய நேரத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா மணிப்பூருக்கு சென்று, அங்கு தங்கி கலவரத்தை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளை எடுத்தார். மணிப்பூர் மாநில அரசுக்குத் தேவையான ஆதரவை மத்திய அரசு தொடர்ந்து அளித்து வருகிறது" என்று பிரதமர் கூறினார்.

மணிப்பூர் மாநிலத்தில் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவது, முகாம்களில் வசிக்கும் மக்களுக்கு உதவிகள் வழங்குவதற்கான நிதி உதவிகளை மத்திய அரசு செய்துள்ளது" என்று மோடி கூறியுள்ளார்.

மணிப்பூரில் மைதேயி மற்றும் குகி இரு சமூகத்தினருக்கு இடையே உருவான மோதல் பெரும் கலவரமாக வெடித்தது. மணிப்பூர் வன்முறையில் இதுவரை 160-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். பொதுச் சொத்துக்களுக்கும், தனியார் சொத்துக்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டது.

Tags:    

Similar News