இந்தியா

கவிழ்ந்த ஆட்டோவை முழு பலத்துடன் தூக்கி தாயை காப்பாற்றிய பள்ளி மாணவி- வீடியோ

Published On 2024-09-09 07:06 GMT   |   Update On 2024-09-09 07:06 GMT
  • மகளை டியூஷன் சென்டரில் இருந்து அழைத்து வருவதற்காக அந்த பெண் சாலையை கடக்கிறார்.
  • விபத்தை கண்ட பள்ளி மாணவி உடனே வேகமாக ஓடி வருகிறார்.

கர்நாடக மாநிலம் மங்களூரு கினிகோலியில் ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் அதன் அடியில் சிக்கிக்கொண்ட தன் தாயை ஆட்டோவை தூக்கி நிறுத்தி, பள்ளி மாணவி காப்பாற்றும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

ராஜரத்தினபுரத்தை சேர்ந்த சேதனா (35) என்பவர் தனது மகளை டியூஷன் சென்டரில் இருந்து அழைத்து வருவதற்காக சாலையை கடக்கிறார்.

சாலையை கடக்க வரும் அந்த பெண் மீது மோதாமல் இருப்பதற்காக டிரைவர் ஆட்டோவை முடிந்தவரை வளைத்து இடது புறம் திருப்புகிறார். ஆனாலும் தவிர்க்க முடியாமல் ஆட்டோ, அந்த இடத்தில் பைக் மீது அமர்ந்துகொண்டு நண்பருடன் பேசிக்கொண்டிருந்தவரின் வண்டியில் மோதியதுடன், அந்த பெண் மீதும் மோதி அவர் மீது கவிழ்ந்தது.

இந்த விபத்தை கண்ட பள்ளி மாணவி உடனே வேகமாக ஓடி வருகிறார். துரிதமாக செயல்பட்டு, தைரியத்துடன் தன் பலத்தை வெளிப்படுத்தி அந்த ஆட்டோவை தூக்கி தன் தாயை காப்பாற்றுகிறார்.

அந்த சிறுமியின் செயலைக்கண்ட அப்பகுதியில் உள்ளவர்கள் மற்றும் அந்த வழியாக சென்றவர்கள் அந்தப் பெண்ணுக்கு உதவுவதற்காக விரைந்து வருகின்றனர்.

ஓட்டுநர் மற்றும் அருகில் இருந்த சிலருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. விபத்தில் சிக்கிய தாயை பள்ளி மாணவி காப்பாற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி உள்ளது.

Tags:    

Similar News