இந்தியா

இன்னும் சாவலயா? இப்போதான் உன்னோட இறுதி சடங்குக்கு போயிட்டு வரேன்.. பதறிய நபர்

Published On 2024-06-24 06:32 GMT   |   Update On 2024-06-24 06:32 GMT
  • போலீசார் எல்லப்பாவின் வீட்டில் இறுதி சடங்கு செய்ய வைத்திருந்த பிணத்தை எடுத்துச் சென்றனர்.
  • ரெயிலில் சிக்கி இறந்தவர் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

தெலுங்கானா மாநிலம், பஷீராபாத் அருகே உள்ள நவந்க்தகியை சேர்ந்தவர் எல்லப்பா (வயது 45). இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வேலை விஷயமாக வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

இந்த நிலையில் விகாரபாத் ரெயில்வே போலீசார் எல்லப்பாவின் வீட்டிற்கு போன் செய்து எல்லப்பா ரெயிலில் சிக்கி இறந்து விட்டார்.

பிணத்தின் அருகே எல்லப்பாவின் செல்போன் இருந்ததாகவும் தெரிவித்தனர்.

இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர். பின்னர் ஆஸ்பத்திரியில் உள்ள பிணவறைக்கு சென்று பார்த்தனர்.

அப்போது இறந்த கிடந்தவரின் முகம் முழுவதும் சிதைந்து காணப்பட்டதால் இறந்தது எல்லப்பா தான் என முடிவு செய்தனர். இதையடுத்து பிணத்தை வீட்டிற்கு கொண்டு வந்து இறுதி சடங்குகள் நடந்து வந்தன.

இந்த நிலையில் எல்லப்பாவின் உறவினர் ஒருவர் எல்லப்பாவை தண்டூரில் சந்தித்தார். அப்போது நீ இறந்து விட்டதாக உன்னுடைய குடும்பத்தார் இறுதி சடங்கு செய்வதாக கூறினார்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த எல்லப்பா வீட்டிற்கு போன் செய்து தான் உயிருடன் இருப்பதாக கூறினார். எல்லாப்பா உயிருடன் இருப்பதை அறிந்த உறவினர்கள் இறுதி சடங்கு செய்வதை நிறுத்தினர். பின்னர் எல்லப்பா ரெயில்வே போலீஸ் நிலையத்திற்கு சென்று தன்னுடைய செல்போனை யாரோ திருடி சென்று விட்டதாகவும், விபத்தில் இறந்தவர் யார் என்று தெரியவில்லை என கூறினார்.

இதையடுத்து போலீசார் எல்லப்பாவின் வீட்டில் இறுதி சடங்கு செய்ய வைத்திருந்த பிணத்தை எடுத்துச் சென்றனர். ரெயிலில் சிக்கி இறந்தவர் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News