இந்தியா (National)

கோப்புப்படம் 

பூமிக்கு கிடைத்த மினி மூன்.. இன்று முதல் 53 நாட்கள்.. வானியல் அதிசயம்.. என்ன ஸ்பெஷல்?

Published On 2024-09-29 16:12 GMT   |   Update On 2024-09-29 16:12 GMT
  • நிலவைவிட கிட்டத்தட்ட 1 லட்சத்து 73 ஆயிரத்து 700 மடங்கு சிறியது ஆகும்.
  • பூமியின் அருகே சுமார் 14 லட்சம் கிலோமீட்டர் தூரத்தில் தோன்ற இருக்கிறது.

பூமிக்கு இன்று முதல் புதிய மற்றும் தற்காலிக 'மினி மூன்' இன்றிரவு முதல் நிலவில் தோன்றுகிறது. "2024 பிடி5" என அழைக்கப்படும் புதிய மினி மூன் சிறிய விண்கல் ஆகும். இது பூமியின் அருகே சுமார் 14 லட்சம் கிலோமீட்டர் தூரத்தில் தோன்ற இருக்கிறது.

இந்த மினி மூன் சுமார் 5 முதல் 20 மீட்டர் விட்டம் கொண்ட பாறை எனலாம். இதன் மீது சூரிய ஒளிப்பட்டு அது பூமியை நோக்கி திரும்புகிறது. அப்போது நமக்கு வானில் இன்னொரு நிலாவும் தோன்றுவது போல் காட்சி அளிக்கிறது. ஆனால் இந்த மினி நிலவு, வழக்கமான நிலவைவிட கிட்டத்தட்ட 1 லட்சத்து 73 ஆயிரத்து 700 மடங்கு சிறியது ஆகும்.

மினி மூன்-ஐ வெறும் கண்களால் பார்க்க முடியாது. இதனை தொலைநோக்கி மூலம் மட்டுமே பார்க்க முடியும். இன்று நள்ளிரவு 1.30 மணிக்கு இது வானில் தோன்றுகிறது. இன்று நள்ளிரவு தோன்றும் மினி நிலவை வருகிற நவம்பர் 25 ஆம் தேதி வரை கண்டுகளிக்கலாம். 

Tags:    

Similar News