இந்தியா
வீட்டில் 15 லிட்டர் பீர் வைத்துக் கொள்ள அனுமதி
- உரிய அனுமதி பெற வேண்டும் என்று உத்தரகாண்ட் மாநில அரசு அறிவித்துள்ளது.
- 21 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே மினி பார் வைக்க அனுமதி உண்டு என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் வீடுகளில் மினி மது பார் வைத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக உரிய அனுமதி பெற வேண்டும் என்று உத்தரகாண்ட் மாநில அரசு அறிவித்துள்ளது.
வருமான வரி செலுத்துபவர்கள் இந்த அனுமதியை பெற தகுதி உடையவர்கள் ஆவார்கள். ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் கட்டணம் செலுத்தி இந்த அனுமதியை பெற வேண்டும்.
இந்த அனுமதியை பெற்றால் மது பிரியர்கள் தங்களது வீட்டில் 18 லிட்டர் வெளிநாட்டு மதுபான வகைகளை வைத்துக்கொள்ளலாம். 9 லிட்டர் ஒயின் வைத்துக் கொள்ளலாம். 15.6 லிட்டர் பீர் வகைகளையும் வீட்டில் இருப்பு வைத்துக் கொள்ளலாம்.
இந்த மினி பாரை வைத்திருப்பவர்கள் விற்பனை செய்யக்கூடாது. 21 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே மினி பார் வைக்க அனுமதி உண்டு என்று அறிவிக்கப்பட்டுள்ளது.