கப்பல் எதிர்ப்பு ஏவுகணை சோதனை வெற்றி - இந்தியா சாதனை
- ஏவுகணை மாற்றப்பட்ட இலக்கை மிக துல்லியமாக தாக்கியது.
- ஏவுகணை பரிசோதனை செவ்வாய் கிழமை அன்று நடைபெற்றது.
இந்தியாவின் கடல்வழி பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், பாதுகாப்பு ஆய்வு மற்றும் வளர்ச்சி நிறுவனம் (டி.ஆர்.டி.ஒ.) கப்பல் எதிர்ப்பு ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்தது. சந்திபூரில் நடைபெற்ற இந்த சோதனையில் ஏவுகணை குறுகிய தூர இலக்குகளை துல்லியமாக தாக்கி அழித்தது.
ஆரம்பத்தில் ஏவுகணை ஒரு குறிப்பிட்ட மண்டலத்திற்குள் பெரிய இலக்கை நோக்கிச் சென்றது. பிறகு இதை ஏவிய விமானி சிறிய மறைக்கப்பட்ட இலக்கைத் தேர்ந்தெடுத்தார். எனினும், ஏவுகணை மாற்றப்பட்ட இலக்கை மிக துல்லியமாக தாக்கியது.
பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ள தகவல்களின் படி இந்த ஏவுகணையின் பரிசோதனை செவ்வாய் கிழமை அன்று நடைபெற்றுள்ளது. இந்த சோதனையில் ஏவுகணையின் மேன்-இன்-லூப் அம்சத்தை நிரூபித்துள்ளன. மேலும் ஏவுகணை அதன் அதிகபட்ச வரம்பில் ஒரு சிறிய கப்பல் இலக்கை நேரடியாகத் தாக்கியுள்ளன.
ஏவிய பிறகும், இலக்கை மாற்றும் வசதி கொண்ட இந்த ஏவுகணையில் இருவழி டேட்டாலின்க் சிஸ்டம் உள்ளது. சோதனையில் இந்த ஏவுகணை அதன் திட்டமிட்ட நோக்கங்கள் அனைத்தையும் பூர்த்தி செய்துள்ளது.