இஸ்ரோ இயக்குனர் சோம்நாத்துக்கு புற்றுநோய் பாதிப்பு
- தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக சோம்நாத் அறிவிப்பு.
- சோம்நாத் வயிற்று பகுதியில் ஏற்பட்ட புற்றுநோயக்கு சிசிச்சை.
ஆதித்யா எல்1 செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்ட அதே நாளில் இஸ்ரோ இயக்குநர் சோம்நாத்துக்கு புற்றுநோய் கண்டறியப்படுள்ளது. அதாவது, கடந்த ஆண்டு செப்டம்பர் 2ம் தேதி தனக்கு புற்றுநோய் இருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதியானதாக தெரிவித்துள்ளார்.
சந்தியான்- 3 செயற்கைக்கோள் செலுத்தப்பட்ட அந்த நாளில் உடலில் சில பிரச்சினைகள் இருந்ததை உணர்ந்ததாக சோம்நாத் தெரிவித்துள்ளார்.
தற்போது, புற்றுநோயில் இருந்து மீண்டு வந்துள்ளேன் என்றும் தொடர்ந்து சிகிச்சை பெறுகிறேன் என்றும் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
சோம்நாத் வயிற்று பகுதியில் ஏற்பட்ட புற்றுநோயக்கு மருத்துவமனையில் தங்கி 4 நாட்கள் சிகிச்சை எடுத்துக் கொண்டுள்ளார். சிகிச்சை முடிந்து 5ம் நாளிலேயே சோம்நாத் வழக்கமான பணிக்கு திரும்பியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நெல்லை மகேந்திரகிரியில் நடைபெற்ற இஸ்ரோ மைய நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன், சோம்நாத் பங்கேற்றிருந்தார்.