இந்தியா

நிலத்தை எழுதி கொடுக்க மறுத்த தாய்: கோடரியால் தாக்கி உடலை தண்ணீர் தொட்டில் வீசிய கொடூர மகன்

Published On 2025-02-27 19:08 IST   |   Update On 2025-02-27 19:08:00 IST
  • பூர்விக நிலத்தை தனக்கு மாற்றி தரும்படி தாயிடம் கேட்டுள்ளார்.
  • தாய் மறுப்பு தெரிவிக்க தீர்த்துக்கட்ட முடிவு செய்து கொலை செய்துள்ளார் மகன்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் பெற்ற தாயை பூர்விக நிலத்தை எழுதி கொடுக்க மறுத்ததால் கோடரியால் தாக்கி உடலை தண்ணீர் தொட்டியில் வீசிய கொடூர மகன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் லதூர் மாவட்டத்தில் வனிதா பிரகாஷ் சாம் (55) என்ற பெண் வசித்து வந்தார். இவரது மகன் விக்ரம் பிரகாஷ் சாம். வனிதா பிரகாஷ் சாமிற்கு பூர்விக விவசாய நிலம் இருந்துள்ளது. இந்த நிலத்தை தனது பெயருக்கு மாற்றும்படி விக்ரம் பிரகாஷ் கேட்டுள்ளார். அதற்கு நிலத்தை மாற்றி தர முடியாது என வனிதா தெரிவித்துள்ளார்.

இதனால் கடுங்கோபம் அடைந்த மகன் விக்ரம், தாயை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை தூங்கிக் கொண்டிருந்த தனது தாயை கோடரியால் தாக்கியுள்ளார். இதனால் வனிதா பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கொலையை மறைப்பதற்காக தாயின் உடலை அருகில் உள்ள தண்ணீர் தொட்டில் வீசியுள்ளார். போலீசார் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். அப்போது விக்ரம் மீது சந்தேகம் ஏற்பட, அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளார். அப்போது தனது தாயை கொலை செய்ததை விக்ரம் ஒப்புக் கொண்டுள்ளார்.

நிலத்திற்காக பெற்ற மகன் தாயை அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News