இந்தியா

ஆர்எஸ்எஸ் கருத்தால் அஜித் பவார் கட்சி- பாஜக இடையே வெடித்தது கருத்து போர்

Published On 2024-06-14 13:49 GMT   |   Update On 2024-06-14 13:49 GMT
  • மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன.
  • அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் உடனான கூட்டணி குறித்து ஆர்எஸ்எஸ் விமர்சனம்.

மக்களவை தேர்தலில் பாஜக-வுக்கு நினைத்த மாதிரி வெற்றி கிடைக்கவில்லை. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 48 இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக 9 இடங்களிலும், அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி ஒரு இடத்திலும், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா 7 இடங்களிலும் வெற்றி பெற்றது. இந்த கூட்டணிக்கு மொத்தம் 17 இடங்கள் மட்டுமே கிடைத்தன.

இந்த நிலையில்தான் ஆர்எஸ்எஸ் தனது வாரந்திர பத்திரிகையில் (Organiser) மகாராஷ்டிரா மாநில தோல்வி குறித்து கட்டுரை எழுதியிருந்தது. அதில் பாஜக-அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி கூட்டணி குறித்து விமர்சித்திருந்தது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் அஜித் பவார் கட்சியுடன் கூட்டணி வைத்தது தேவையில்லாத அரசியல். தேசிய ஜனநாயக கூட்டணியில் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியை இணைத்தது பாஜகவின் பிராண்ட் மதிப்பை குறைத்துள்ளது. பாஜக எந்தவித மாறுபாடு இன்றி மற்றொரு அரசியல் கட்சியாகியுள்ளது என விமர்சித்திருந்தது.

இதனால் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ்- பாஜக கட்சி தலைவர்கள் இடையே வார்த்தை போர் மூண்டுள்ளது.

ஆர்எஸ்எஸ் கருத்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மாநில முதல்வருமான சாகன் புஜ்வால் கூறுகையில் "அதில் மேலும் எழுதப்பட்ட சில கருத்துகள் உண்மையாக இருக்கலாம். சிலர் ஏற்கனவே பாஜகவை காங்கிரஸ் தலைவர்களை இணைத்ததால் விமர்சனம் செய்தனர். அசோக் சவான் உள்ளிட்டோர் இணைந்தது குறித்து விமர்சனம் செய்தனர். ஏக்நாத் ஷிண்டே முன்னாள் காங்கிரஸ் தலைவர் மிலிந்த் தியோராவை இணைத்துக்கொண்டு ஆர்எஸ்எஸ் உறுப்பினராக்கியது குறித்துகூட விமர்சனம் எழுந்தது.

உத்தர பிரதேச மாநிலத்தில் பாஜக-வுக்கு பெரும்பாலான இடங்கள் குறைந்ததே, அதைப்பற்றி யார் பேசுவார்கள்?. மற்ற மாநிலங்களில் கூட கடந்த முறையை விட குறைவான இடங்கள்தான் கிடைத்தது. இதைப் பற்றி யார் பேசுவார்கள்?" என்றார்.

தேசியவாத காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை எம்.பி.யுமான பிரபுல் பட்டேல் "ஆர்எஸ்எஸ் கட்டுரை பாஜக-வின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தாது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணி தலைவர் சூரஜ் சவான், பாஜக சிறப்பாக செயல்பட்டபோது, கிரெடிட் ஆர்எஸ்எஸ்-க்கு கொடுக்கப்படுகிறது. ஆனால், தோல்வியடைந்தால் அஜித் பவாரை குறை கூறுவதா? என ததக்க பதிலடி கொடுத்துள்ளார்" என்றார்.

ஆர்எஸ்எஸ் கருத்து ஆதரிக்கும் பாஜக எம்எல்சி பிரவின் தரேகார் "எங்களுக்கு எல்லாம் ஆர்எஸ்எஸ் தந்தை போன்றது. ஆர்எஸ்எஸ் குறித்து கருத்துகளை கூற வேண்டியதில்லை. ஆர்எஸ்எஸ் மீது சூரஜ் சவான் அதுபோன்று கடுமையான கருத்துகளை தெரிவித்திருக்கக் கூடாது. பாஜக தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கருத்து கூறவில்லை. தேசியஜனநாயக கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் இது குறித்து விவாதம் செய்தால் சிறந்ததாக இருக்கும்" என்றார்.

Tags:    

Similar News