இந்தியா

நட்சத்திர ஓட்டலில் 20 மாதங்கள் தங்கிய வாடிக்கையாளர்... ரூ.58 லட்சம் வாடகை பாக்கி வைத்து ஓட்டம்

Published On 2023-06-23 02:58 GMT   |   Update On 2023-06-23 02:58 GMT
  • பணம் செலுத்தாதற்கு ஓட்டலின் ஊழியர்கள் சிலர் உதவி புரிந்ததாக தெரியவந்தது.
  • கட்டண ஏய்ப்பு குறித்து விமான நிலைய போலீசில் புகார் செய்யப்பட்டது.

புதுடெல்லி:

டெல்லியில் இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையம் அருகே உள்ள 'ரோசேட் ஹவுஸ்' என்கிற ஐந்து நட்சத்திர ஓட்டலில், அக்குஷ் தத்தா என்பவர் கடந்த 2019-ம் ஆண்டு மே மாதம் 30-ந் தேதி அறை ஒன்றை ஒரு நாள் வாடகைக்கு எடுத்து தங்கினார். மறுநாள் காலிசெய்து சென்றிருக்க வேண்டிய அவர், மாதக்கணக்கில் அங்கேயே தங்கியும் எந்த கட்டணத்தையும் செலுத்தவில்லை என்று தெரிகிறது.

இப்படி 2021-ம் ஆண்டு ஜனவரி 22-ந் தேதி வரை தொடர்ந்து 20 மாதங்களுக்கு மேல் தங்கிய அவர், சுமார் ரூ.58 லட்சம் வாடகை செலுத்த வேண்டும். ஆனால் பைசா கட்டணம்கூட அவர் செலுத்தவில்லை.

இந்த விவரங்கள் ஓட்டலின் கணக்குத் தணிக்கையில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அவர் பணம் செலுத்தாதற்கு ஓட்டலின் ஊழியர்கள் சிலர் உதவி புரிந்ததாகவும் தெரியவந்தது.

இந்த கட்டண ஏய்ப்பு குறித்து விமான நிலைய போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாடகை பாக்கி வைத்து தலைமறைவான அவரை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News