இந்தியா
'எக்மோர்' இல்லை.. 'எழும்பூர்' ரெயில் நிலையம் என்றே சொல்கிறேன்.. அஸ்வினி வைஷ்ணவ் மக்களவையில் கலகல
- சென்னை சைதாபேட், எக்மோர் ரெயில் நிலையத்தின் மீட்டுருவாக்கம் குறித்து கேள்வி எழுப்பினார்.
- சென்னையின் சிறப்பான இடங்களில் ஒன்றாக மாறும் என்று உறுதியளித்தார்.
பாராளுமன்ற மக்களவை குளிர்கால கூட்டத்தொடர் கடந்த நவம்பர் 25 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் இன்றும் மக்களவையில் தொடங்கிய கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்த விவாதம் இடம்பெற்றது. கூட்டத்தில் பேசிய திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன், சென்னை சைதாபேட், எக்மோர் ரெயில் நிலையத்தின் மீட்டுருவாக்கம் குறித்து கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து பேசிய மத்திய ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், 'சென்னை எழும்பூர் ரயில் நிலையம் என்றே சொல்கிறேன்' என்று கூறியது அவையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
தொடர்ந்து பேசிய அவர், எழும்பூர் ரயில் நிலையம் மிகவும் சிறப்பாக புதுப்பிக்கப்பட்டு சென்னையின் சிறப்பான இடங்களில் ஒன்றாக மாறும் என்று உறுதியளித்தார்.