'நல்ல நோக்கத்துடன்' கொண்டுவரப்பட்டால் ஒரே நாடு ஒரே தேர்தல் நன்மை பயக்கும் - பிரசாந்த் கிஷோர்
- நாளை மறுநாள் [திங்கள்கிழமை] இந்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
- ஒரு குறிப்பிட்ட சமூகத்தைக் குறிவைக்கப் பயன்படுத்தப்பட்டது
மக்களவையின் 543 தொகுதிகள், மாநிலங்களின் 4,120 சட்டப்பேரவைத் தொகுதிகள், 30 லட்சத்துக்கும் மேற்பட்ட உள்ளாட்சிப் பதவிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த சாத்தியக்கூறுகள் உள்ளனவா? என ஆராய முன்னாள் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் தலைமையில் ஒரு குழு அமைத்தது.
இந்த குழு ஒரு நாடு ஒரே தேர்தல் நடத்துவது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்தது. இதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதைத்தொடர்ந்து நாளை மறுநாள் [திங்கள்கிழமை] இந்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இந்நிலையில் இந்த மசோதா குறித்து பீகாரை சேர்ந்த பிரபல அரசியல் வியூக வகுப்பாளரும் ஜன் சுராஜ் கட்சி தலைவருமான பிரசாத் கிஷோர் கருத்து தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், நான் பல தேர்தல்களில் ஈடுபட்டுள்ளேன். ஒவ்வொரு ஆண்டும் தேசத்தின் கணிசமான பகுதியினர் தேசிய அல்லது மாநில அளவில் ஏதாவது தேர்தல்களில் ஈடுபடுவதை நான் கவனித்திருக்கிறேன்.
ஒரே நாடு ஒரே தேர்தல் நல்ல நோக்கத்துடன் கொண்டுவரப்பட்டால், நாட்டிற்கு நன்மை பயக்கும் என்று தெரிவித்தார்.
ஆனால் பயங்கரவாதத்தை ஒடுக்கும் முகாந்திரத்தில் கொண்டு வரப்பட்ட சட்டங்கள், ஒரு குறிப்பிட்ட சமூகத்தைக் குறிவைக்கப் பயன்படுத்தப்பட்டது என்ற உதாரணத்தை கூறி பிரசாத் கிஷோர், ஒரே நாடு ஒரே தேர்தல் கொண்டுவரப்படும் நோக்கம் குறித்தும் எச்சரித்தார்.