இந்தியா

மாணவர்கள் தாக்கியதில் பிளஸ்-2 மாணவர் காது கிழிந்தது- பள்ளி நிர்வாகம் மீது பெற்றோர் புகார்

Published On 2025-02-27 12:34 IST   |   Update On 2025-02-27 12:34:00 IST
  • மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
  • புகாரின் பேரில் சைல்டு லைன் அமைப்பினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் கோட்டயத்தில் மாடல் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான விடுதி உள்ளது. இங்கு மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் 10-ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில் பிளஸ்-2 மாணவரின் காது துண்டிக்கப்பட்டது.

அந்த மாணவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வீட்டில் ஓய்வு எடுத்து வரும் நிலையில், மாணவர்கள் மோதலை விடுதி வார்டன் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் மறைக்க முயன்றதாகவும், இதனால் பாதிக்கப்பட்ட மாணவரின் சிகிச்சை தாமதப்படுத்தப்பட்டதாகவும் பெற்றோர் புகார் கூறி உள்ளனர். இது தொடர்பாக அவர்களது புகாரின் பேரில் சைல்டு லைன் அமைப்பினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News