இந்தியா

சட்டம்-ஒழுங்கு தோல்வி: டெல்லியை "கற்பழிப்பு, கிரைம் தலைநகர்" என முத்திரை குத்தும் அவலம்: அமித் ஷாவுக்கு கெஜ்ரிவால் கடிதம்

Published On 2024-12-14 07:31 GMT   |   Update On 2024-12-14 07:31 GMT
  • பள்ளிகள், விமான நிலையங்கள், மால்கள் உள்ளிட்டவைகளுக்கு அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல் .
  • டெல்லியில் ஒவ்வொரு பெற்றோர்களும், ஒவ்வொரு குழந்தைகளும் வெடிகுண்டு பயத்தின் கீழ் வாழ்ந்து வருகிறார்கள்.

குற்றம் தொடர்பான புள்ளி விவரங்களை சுட்டிக்காட்டி இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் டெல்லியை இந்தியாவின் குற்றத் தலைநகராக அங்கீகரிக்கும் வகையில் குற்றங்கள் அதிகரித்து வருவதாக மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவிற்கு ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார்.

போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் 350 சதவீதம் அதிகரித்துள்ள நிலையில் பள்ளிகள், விமான நிலையங்கள், மால்கள் உள்ளிட்டவைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் அடிக்கடி விடுக்கப்படுவதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

வெடிகுண்டு மிரட்டல் காரணமாக ஒரு குழந்தை எப்படிப்பட்ட சூழ்நிலையை சந்திக்கும், பள்ளியை காலி செய்து குழந்தைகள் வீட்டிற்கு அனுப்பப்படும்போது அவர்களின் பெற்றோர் படும்பாடு என்ன என்பதை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?

இன்று டெல்லியில் ஒவ்வொரு பெற்றோர்களும், ஒவ்வொரு குழந்தைகளும் வெடிகுண்டு பயத்தின் கீழ் வாழ்ந்து வருகிறார்கள். உங்களது மேற்பார்வையின் கீழ் உள்ள நம்முடைய புகழ்வாய்ந்த டெல்லி, தற்போது கற்பழிப்பு தலைநகர், கிரைம் தலைநகர் என சட்டம் ஒழுங்கு தோல்வியால் முத்திரை குத்தப்படுகிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News