கலவர கும்பலிடமே இரு பெண்களையும் விட்டுச் சென்ற போலீசார்- சிபிஐ குற்றப் பத்திரிகையில் தகவல்
- 2 பழங்குடியின பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்துச் செல்லும் பதற வைக்கும் வீடியோ வெளியானது
- மணிப்பூர் கலவரம் தொடர்பாக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது
கடந்தாண்டு மணிப்பூரில் வன்முறையில் இரண்டு பழங்குடியின பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக்கி சாலையில் ஊர்வலமாக இழுத்துச் செல்லும் நெஞ்சை பதற வைக்கும் வீடியோ வெளியானது.
இதனையடுத்து மணிப்பூர் அரசாங்கத்தின் கோரிக்கையைத் தொடர்ந்து தொடங்கப்பட்ட சிபிஐ விசாரணையில், ஆறு நபர்கள் மற்றும் ஒரு சிறார் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர்கள் மீது கூட்டுப் பலாத்காரம், கொலை, குற்றச் சதி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் மணிப்பூர் கலவரம் தொடர்பாக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அதில்,
"மணிப்பூரில் வன்முறையின் போது, ஆடைகள் இன்றி இழுத்துச் செல்லப்பட்ட இரு பெண்களும், சாலையில் நின்ற போலீஸ் வாகனத்தில் ஏறி, உதவி கேட்டுள்ளனர். எனினும், வாகனத்தை எடுக்க சாவி இல்லை எனக் கூறியுள்ள போலீசார், கலவரக் கும்பலிடமே இருவரையும் வலுக்கட்டாயமாக விட்டுச் சென்றுள்ளனர் என்ற அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது.