இந்தியா (National)

'திருமணம் செய்வதாக உறுதி': சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம்

Published On 2024-06-18 15:19 GMT   |   Update On 2024-06-18 15:19 GMT
  • பாலியல் வன்கொடுமையால் அப்பெண்ணுக்கு குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
  • குற்றவாளிக்கு 15 நாள் ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

கர்நாடகாவில் 16 வயது சிறுமியை 23 வயது இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதன்மூலம் அப்பெண்ணுக்கு குழந்தை ஒன்று பிறந்துள்ளது. பாலியல் வன்கொடுமை செய்தவர் தான் அந்த குழந்தையின் அப்பா என்று டி.என்.ஏ சோதனையில் தெரிய வந்துள்ளது.

இது சம்பந்தமான வழக்கு கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 18 வயது ஆனவுடன் திருமணம் செய்து கொள்வதாக பாலியல் வன்கொடுமை செய்தவர் நீதிமன்றத்தில் உறுதி அளித்தார்.

இதனையடுத்து குற்றவாளிக்கு 15 நாள் ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. ஜூலை 3 ஆம் தேதி காவல்நிலையத்தில் சரணடைய வேண்டும் என்றும் ஜூலை 4 ஆம் தேதி திருமண சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், இளம் வயதில் தாயாகியுள்ள பெண் மற்றும் அவரது குழந்தையின் நலனை கருத்தில் கொண்டே இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News