இந்தியா

ரிசர்வ் வங்கி, சக்தி காந்ததாஸ்

ரெப்போ வட்டி விகிதம் உயர்வு- தனிநபர் கடன், வாகன கடன் வட்டி உயர வாய்ப்பு

Published On 2022-09-30 05:20 GMT   |   Update On 2022-09-30 05:31 GMT
  • குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் 0.5 சதவீதம் உயர்வு.
  • இந்திய பொருளாதாரம் தொடர்ந்து மீட்பு திறன் கொண்டதாக உள்ளது.

வங்கிகளுக்கான குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி 0.5 சதவீதம் உயர்த்தியுள்ளது. இதன் மூலம் ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதம் 5.4% இருந்து 5.9 % மாக அதிகரித்துள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுனர் சக்தி காந்ததாஸ், இந்திய பொருளாதாரம் தொடர்ந்து மீட்பு திறன் கொண்டதாக இருக்கிறது என்றார். உலக அளவிலான அரசியல் சூழல், நிதிச் சந்தையில் உள்ள நிச்சயமற்ற தன்மையால் பணவீக்கம் அதிகரித்துள்ளதாகவும், நாட்டின் பணவீணக்கம் தற்போது 7% ஆக உள்ளது என்றும் அவர் கூறினார்.

நடப்பாண்டின் இரண்டாம் பாதியில் அது 6% இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். தனியார் நுகர்வு அதிகரித்து வருவதாகவும், கிராமப்புற தேவையும் படிப்படியாக அதிகரித்து வருகிறது என்றும் அவர் தெரிவித்தார். முதலீட்டு தேவை அதிகரித்துள்ளதாகவும், விவசாயத் துறையும் மீள்தன்மையுடன் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். ரெப்போ வட்டி விகிதம் உயர்வு காரணமாக வங்கி தனிநபர் கடன், வாகன கடன் உள்ளிட்டவற்றின் வட்டி விகிதம் மேலும் உயர வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.

Tags:    

Similar News