"லக்கி பாஸ்கர்" படம் பார்த்து தப்பியோடிய பள்ளி மாணவர்கள் மீட்பு
- மாணவர்கள் 4 பேர், 'லக்கி பாஸ்கர்' படம் பார்த்த பிறகு விடுதியில் இருந்து தப்பியோடியனர்.
- சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் மாணவர்களை போலீசார் தேடி வந்தனர்.
வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான லக்கி பாஸ்கர் திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
உலகம் முழுவதும் 111 கோடிக்கும் மேல் வசூலை குவித்த லக்கி பாஸ்கர் திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் விடுதியில் தங்கிப் படிக்கும் 9ம் வகுப்பு மாணவர்கள் 4 பேர், 'லக்கி பாஸ்கர்' படம் பார்த்த பிறகு அதேபோல வீடு, கார் வாங்கிவிட்டு வருவதாக நண்பர்களிடம் கூறி விடுதியில் இருந்து தப்பியோடியனர்.
விடுதியில் இருந்து மாணவர்கள் தப்பித்து செல்லும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தொடர்ந்து, மாணவர்களின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் மாணவர்களை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில், தனியார் பள்ளி விடுதியில் இருந்து தப்பிச் சென்ற 4 சிறுவர்கள், விஜயவாடாவில் பிடிபட்டனர்.
4 சிறுவர்களையும் பத்திரமாக மீட்டு, விசாகப்பட்டினர் அழைத்துச் சென்று, பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.