இந்தியா

இந்து என்பது வேறு; இந்துத்துவம் என்பது வேறு: சித்தராமையா பேச்சு

Published On 2023-12-29 14:04 GMT   |   Update On 2023-12-29 14:04 GMT
  • நாம் ராமருக்கு கோவில் கட்டவில்லையா? பஜனைப் பாடல்களை நாம் பாடவில்லையா?
  • என்னைப் பொறுத்தவரை இந்துத்துவம் என்றால் இந்துத்துவம்தான் என்றார் சித்தராமையா.

பெங்களூரு:

கர்நாடகாவின் பெங்களூருவில் காங்கிரஸ் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முதல் மந்திரி சித்தராமையா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

தேர்தலில் சிறுபான்மையினரின் வாக்குகளை இழக்காமல், இந்துக்களின் வாக்குகளைப் பெறுவதற்கு மென்மையான இந்துத்துவம் என்ற அரசியல் தந்திரத்தை கடைப்பிடிக்க வேண்டும் என கூறப்படுகிறது.

மென்மையான இந்துத்துவம் என்றால் என்ன? கடுமையான இந்துத்துவம் என்றால் என்ன? என்னைப் பொறுத்தவரை இந்துத்துவம் என்றால் இந்துத்துவம்தான்.

நான் ஒரு இந்து. இந்துத்துவம் என்பது வேறு, இந்து என்பது வேறு. நாம் ராமரை வணங்குவதில்லையா? பா.ஜ.க.வினர் மட்டும்தான் ராமருக்கு கோவில் கட்டுகிறார்களா? நாம் ராமருக்கு கோவில் கட்டவில்லையா? பஜனைப் பாடல்களை நாம் பாடவில்லையா?

டிசம்பர் கடைசி வாரத்தில் மக்கள் பஜனைப் பாடல்கள் பாடுவார்கள். எங்கள் கிராமத்தில் நான் அந்தப் பாரம்பரிய நிகழ்வுகளில் பங்கெடுத்துள்ளேன். மற்ற கிராமங்களிலும் இது நடைமுறையில் உள்ளது. பா.ஜ.க.வினர் மட்டும்தான் இந்துக்களா, நாம் இந்துக்கள் இல்லையா என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News