இந்தியா

தமிழ்நாடு என்றால் பெரியார்தான்- மக்களவையில் ராகுல் காந்தி பேச்சு

Published On 2024-12-14 15:19 GMT   |   Update On 2024-12-14 15:19 GMT
  • கர்நாடகா என்றால் பசவண்ணா என்று சொல்லுவோம்.
  • மகாராஷ்டிரா என்றால் அம்பேத்கர், பூலே என்று சொல்லுவோம்.

மக்களவையில் இன்று அரசியல் சாசனம் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், "தமிழ்நாடு பற்றி கேட்டால் நாங்கள் பெரியார் என்று சொல்லுவோம். கர்நாடகா என்றால் பசவண்ணா என்று சொல்லுவோம். மகாராஷ்டிரா என்றால் அம்பேத்கர், பூலே என்று சொல்லுவோம். குஜராத் என்றால் காந்தி என்று சொல்லுவோம். சமூக மாற்றங்களுக்கு வித்திட்டவர்களே தங்களுக்கு முன்மாதிரி" என்று தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், துரோணாச்சாரியார் எப்படி ஏகலைவனின் விரலை வெட்டினாரோ, அதேபோல நீங்களும் இந்த தேசத்தின் விரலை வெட்டிவிட்டீர்கள்.

அதானிக்கு தாராவியை தாரைவார்த்து விட்டீர்கள். தாராவி பகுதியில் உள்ள சிறு வணிகர்களின் விரல்களை வெட்டி விட்டீர்கள். அக்னிவீர் திட்டத்தை கொண்டு வந்து இளைஞர்களின் விரல்களை துண்டித்து விட்டீர்கள்.

நாட்டில் 70 முறை வினாத்தாள் கசிவுகள் நடைபெற்றுள்ளது. வினாத்தாள் கசிவின் மூலம் நாட்டில் உள்ள இளைஞர்களின் விரல்களை துண்டித்துவிட்டீர்கள்" என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News