ஆந்திராவில் மீண்டும் வேகமாக பரவும் கொரோனா- பரிசோதனையை தீவிரப்படுத்த மத்திய அரசு வலியுறுத்தல்
- கொரோனா சிகிச்சை மையங்கள் மூடப்பட்டுள்ளதால் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அவரவர் வீடுகளிலேயே தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- எனவே கொரோனா பரிசோதனையை தீவிரப்படுத்த ஆந்திர மாநில சுகாதாரத்துறைக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
திருப்பதி:
ஆந்திரா கொரோனா 2-வது அலையால் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்தது. கொரோனா தொற்று பாதித்த ஏராளமானோர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவில் வரலாற்றில் முதல்முறையாக முழுமையாக தரிசனம் ரத்து செய்யப்பட்டு கோவில் மூடப்பட்டது. உண்டியல் வருமானமும் பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. ஆந்திராவில் அதிகபட்சமாக விசாகப்பட்டினம் மாவட்டத்தில் 500 பேரும், கிருஷ்ணா மாவட்டத்தில் 150 பேரும், குண்டூர் மாவட்டத்தில் 60 பேரும், பிரகாசம் 30 பேர், சித்தூர் மாவட்டத்தில் 30 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா சிகிச்சை மையங்கள் மூடப்பட்டுள்ளதால் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அவரவர் வீடுகளிலேயே தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே கொரோனா பரிசோதனையை தீவிரப்படுத்த ஆந்திர மாநில சுகாதாரத்துறைக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
மேலும் கொரோனா சிகிச்சை மையங்களை தயார் நிலையில் வைக்குமாறு கூறியுள்ளனர். ஆந்திராவில் மீண்டும் கொரோனா வேகமாக பரவி வருவதால் அம்மாநில மக்கள் மிகவும் அச்சம் அடைந்து உள்ளனர்.