இந்தியா

இந்திய பணக்காரர்களில் ரூ.12 லட்சம் கோடி சொத்துடன் கவுதம் அதானி முதலிடம்

Published On 2022-11-29 10:44 GMT   |   Update On 2022-11-29 10:44 GMT
  • இந்தியாவின் நம்பர்-1 பணக்காரராக திகழ்ந்த முகேஷ் அம்பானி 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
  • டி-மார்ட் சூப்பர் மார்க்கெட் நிறுவனர் ராதாகிஷன் தாம்லனி 3-வது இடத்தில் உள்ளார்.

இந்தியாவின் முதல் 10 பணக்காரர்கள் பற்றிய விவரங்களை போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி அதானி குரூப் நிறுவன தலைவர் கவுதம் அதானி இந்தியாவின் நம்பர் 1 பணக்காரராக திகழ்வது தெரிய வந்துள்ளது.

அவரது சொத்து மதிப்பு 12 லட்சத்து 11 ஆயிரத்து 40 கோடி ரூபாயாகும். இதன் மூலம் அவர் உலகின் 2-வது மிகப்பெரிய பணக்காரர் என்ற அந்தஸ்தையும் பெற்றுள்ளார்.

இந்தியாவின் நம்பர்-1 பணக்காரராக திகழ்ந்த முகேஷ் அம்பானி கடந்த ஆண்டு 5 சதவீத இழப்பை சந்தித்ததால் 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். டி-மார்ட் சூப்பர் மார்க்கெட் நிறுவனர் ராதாகிஷன் தாம்லனி 3-வது இடத்தில் உள்ளார்.

இவர்களை தொடர்ந்து சீரம் இன்ஸ்டிடியூட் தலைவர் சைரஸ், ஜின்டால் குரூப் நிறுவனத்தின் சாவித்ரி ஜின்டால், ஆனந்த் மகேந்திரா ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

Tags:    

Similar News