டெல்லி காஜிபூர் எல்லையில் கடும் போக்குவரத்து நெரிசல்
- பஞ்சாப் முதல் ஹரியானா,டெல்லி வரை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
- நோயாளிகளை கொண்டு செல்லும் ஆம்புலன்ஸ்களும் இந்த நெரிசலில் சிக்கி தவித்து வருகின்றன.
விவசாயிகளின் 4-வது நாள் போராட்டம் காரணமாக டெல்லி எல்லையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. பல அடுக்குகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும், வாகனங்களும் சோதனை செய்யப்பட்டு வருகின்றன.
இதையொட்டி பஞ்சாப் முதல் ஹரியானா,டெல்லி வரை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
டெல்லியின் காஜிபூர் எல்லையிலும் தீவிர கண்காணிப்பு உள்ளது. தடுப்புவேலிகள் அமைத்து வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு வருகிறது.
இதனால், கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. நோயாளிகளை கொண்டு செல்லும் ஆம்புலன்ஸ்களும் இந்த நெரிசலில் சிக்கி தவித்து வருகின்றன.
டெல்லிக்கும் ஹரியானாவுக்கும் இடையே உள்ள 2 பெரிய எல்லைகளான திக்ரி மற்றும் சிங்கு எல்லையில் வாகனங்கள் செல்ல முடியாதபடி மூடப்பட்டு உள்ளன.
மேலும் அங்கு விவசாயிகள் டெல்லி நகருக்குள் நுழைவதை தடுக்க டெல்லி போலீசார் பல அடுக்கு முள்கம்பிகள், கான்கிரீட் தடுப்பு வேலிகள் அமைத்து உள்ளனர்.
#WATCH | Traffic snarls continue as commuters face delays and traffic jams entering into Delhi; visuals from Ghazipur border pic.twitter.com/hfJdReL5pe
— ANI (@ANI) February 16, 2024