இந்தியா

சகோதரி திருமணத்துக்காக கஞ்சா விற்ற ஓட்டல் ஊழியர் கைது

Published On 2024-09-11 01:44 GMT   |   Update On 2024-09-11 01:44 GMT
  • ஒடிசாவில் இருந்து குறைந்த விலைக்கு கஞ்சாவை வாங்கி வந்து பெங்களூரு, தட்சிண கன்னடாவில் விற்று வந்துள்ளார்.
  • கைதான பத்ருத்தீன் மீது பானசவாடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பானசவாடி:

பெங்களூரு பானசவாடி போலீசாருக்கு கிடைத்த தகவலின்பேரில் கஞ்சா விற்பனை செய்து வந்த நபரை கைது செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், அவர் தட்சிண கன்னடா மாவட்டம் புத்தூரை சேர்ந்த பத்ருத்தீன் என்று தெரிந்தது.

இவர், ஓட்டலில் ஊழியராக வேலை செய்து வந்துள்ளார். பத்ருத்தீன் குடும்பம் ஏழ்மையில் இருந்துள்ளது. இதனால் எளிதில் பணம் சம்பாதிக்க அவர் ஆசைப்பட்டுள்ளார். மேலும் பத்ருத்தீனுக்கு ஒரு சகோதரியும் உள்ளார். அவரது திருமணத்தை நடத்துவதற்கும் பணம் தேவைப்பட்டுள்ளது.

இதற்காக ஒடிசாவில் இருந்து குறைந்த விலைக்கு கஞ்சாவை வாங்கி வந்து பெங்களூரு, தட்சிண கன்னடாவில் அவர் விற்று வந்துள்ளார். அதன்படி, ஒடிசாவில் இருந்து ரெயிலில் அவர் கஞ்சாவை கடத்தி வந்துள்ளார். பையப்பனஹள்ளியில் உள்ள எஸ்.எம்.வி.டி. ரெயில் நிலையத்தில் இருந்து வெளியே வந்த பத்ருத்தீனை கஞ்சாவுடன் பானசவாடி போலீசார் கைது செய்திருந்தார்கள். அவரிடம் இருந்து ரூ.1 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

கைதான பத்ருத்தீன் மீது பானசவாடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விசாரணைக்கு பின்பு அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Similar News