அமெரிக்காவில் நடந்த மிஸ் இந்தியா அழகிய முகம் போட்டியில் கேரள இளம்பெண்ணுக்கு முதல் பரிசு
- அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் ஆண்டுதோறும் அமெரிக்காவாழ் இந்தியர்கள் பங்கேற்கும் அழகி போட்டி நடைபெறும். இதில் தனிஷா பங்கேற்பது வழக்கம்.
- இந்த ஆண்டுக்கான போட்டி நியூ ஜெர்சியில் உள்ள ராயல் ஆல்பர்ட் அரண்மனையில் நடந்தது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கோட்டயம், ஏற்றமானூர் பகுதியை சேர்ந்தவர் நாராயணசர்மா.
நாராயணசர்மாவின் மனைவி மஞ்சிமா கவுசிக். இவர்களின் மகள் தனிஷா. இவர்கள் அமெரிக்காவில் வசித்து வருகிறார்கள்.
நாராயண சர்மா சமீபத்தில் இறந்து விட்டார். என்றாலும் அவரது குடும்பத்தினர் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் வசித்து வந்தனர்.
அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் ஆண்டுதோறும் அமெரிக்காவாழ் இந்தியர்கள் பங்கேற்கும் அழகி போட்டி நடைபெறும். இதில் தனிஷா பங்கேற்பது வழக்கம்.
இதற்கு முன்பு நடந்த போட்டியில் தனிஷாவுக்கு மிஸ் திறமைச்சாலி பட்டம் கிடைத்தது. இந்த ஆண்டுக்கான போட்டி நியூ ஜெர்சியில் உள்ள ராயல் ஆல்பர்ட் அரண்மனையில் நடந்தது.
இந்த போட்டியில் 30 மாநிலங்களில் இருந்து 74 பேர் பங்கேற்றனர். பல்வேறு பிரிவுகளில் நடந்த போட்டியில் மிஸ் அழகிய முகம் போட்டியில் தனிஷாவுக்கு முதல் பரிசு கிடைத்தது.
பட்டம் வென்ற தனிஷாவை போட்டியில் பங்கேற்றவர்கள் மற்றும் அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் பலரும் வாழ்த்தினர்.