இந்தியா

பா.ஜ.க.-வில் இணைகிறேனா?: ஒருபோதும் அக்கட்சிக்கு தலைவணங்க மாட்டேன்- அபிஷேக் பானர்ஜி

Published On 2025-02-27 14:39 IST   |   Update On 2025-02-27 14:39:00 IST
  • நான் பாஜக-வில் இணைய இருப்பதாக சில செய்திகள் பரவி வருகின்றன.
  • என்னுடைய கழுத்தை அறுத்தாலும் கூட, எனது மூச்சு நிற்கும் வரை மம்தா பானர்ஜி ஜிந்தாபாத் முழக்கம்தான் வாயில் இருந்து வரும்.

மம்தா பானர்ஜியின் நெருங்கிய உறவினரான அபிஷேக் பானர்ஜி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளராகவும், எம்.பி.யாகவும் உள்ளார். இவர் பா.ஜ.க.-வில் இணையப் போவதாக தகவல் வெளியானது.

இது தொடர்பாக அபிஷேக் பானர்ஜி விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நான் பாஜக-வில் இணைய இருப்பதாக சில செய்திகள் பரவி வருகின்றன. நான் ஒருபோதும் பாஜக முன் தலைவணங்க மாட்டேன் என்பதை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். என்னுடைய கழுத்தை அறுத்தாலும் கூட, எனது மூச்சு நிற்கும் வரை மம்தா பானர்ஜி ஜிந்தாபாத் முழக்கம்தான் வாயில் இருந்து வரும்.

இந்த நேரம் வரை நீங்கள் எங்களுடன் (திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்) இருக்கும் வரை பாஜக-வின் சக்ரவியூகத்தை தொடர்ந்து உடைத்தெறிவோம். கட்சிக்கு எதிராக யார் பேசுகிறார்கள் என்பதை கண்டறிந்துள்ளோம்.

கட்சிக்கு எதிராக முகுல் ராய் மற்றும் சுவேந்து அதிகாரி செயல்பட்டதை நான்தான் அடையாளம் கண்டேன்.

இவ்வாறு அபிஷேக் பானர்ஜி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News