இந்தியா

மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல்.. உத்தவ் தாக்கரே மகன் ஆதித்யா அபார வெற்றி

Published On 2024-11-23 12:14 GMT   |   Update On 2024-11-23 12:14 GMT
  • வோர்லி தொகுதியில் உத்தவ் தாக்கரே மகனான ஆதித்யா தாக்கரே போட்டியிட்டார்.
  • ஆதித்யா தாக்கரே 8801 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

288 சட்டமன்றத் தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிராவுக்கு கடந்த நவம்பர் 20 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. மகாயுதி [பாஜக - ஷிண்டே சிவசேனா - அஜித் பவார் என்சிபி] மற்றும் மகா விகாஸ் அகாதி [ காங்கிரஸ் - உத்தவ் சிவசேனா - சரத் பவார் என்சிபி] இடையே கடுமையான போட்டி நிலவியது.

பெரும்பான்மைக்கு 145 இடங்கள் வேண்டியிருக்கும் நிலையில் தற்போதைய வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி பாஜக [ மகாயுதி] கூட்டணி 229 இடங்களில் முன்னிலையில் உள்ளது, காங்கிரஸ் [மகா விகாஸ் அகாதி] 49 இடங்களிலும் பிற கட்சிகள் 10 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது.

காங்கிரஸ் கூட்டணி படுதோல்வியடைந்ததையொட்டி மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியை தக்கவைக்கிறது.

இந்த தேர்தலில் வோர்லி தொகுதியில் உத்தவ் தாக்கரே மகனான ஆதித்யா தாக்கரே போட்டியிட்டார். ஆரம்பத்தில் சிவசேனா (ஷிண்டே) வேட்பாளர் மிலிந்த் முர்ளி தியோராவிடம் பின்னடைவை சந்தித்த ஆதித்யா அடுத்தடுத்த வாக்கு எண்ணிக்கை சுற்றுகளில் முன்னிலை பெற்று இறுதியாக 8801 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

Tags:    

Similar News