இந்தியா

பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்

Published On 2024-12-11 20:03 GMT   |   Update On 2024-12-11 20:03 GMT
  • பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.
  • பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

புதுடெல்லி:

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 25-ம் தேதி தொடங்கியது. முதல் நாளில் இருந்து அதானி லஞ்ச விவகாரத்தை எழுப்பி, தினமும் பாராளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

மேலும் பாராளுமன்ற கூட்டுக்குழு அமைத்து விசாரணை நடத்தவேண்டும் என வற்புறுத்தி வருகின்றன.

பாராளுமன்றத்தில் அவைத்தலைவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம், காங்கிரஸ்-ஜார்ஜ் சோரோஸ் விவகாரம் தொடர்பாக நேற்று ஏற்பட்ட அமளியால் மாநிலங்களவை கூட்டம் நாள்முழுவதும் ஒத்துவைக்கப்பட்டது.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று (வியாழக்கிழமை) மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது.

தலைநகர் டெல்லியில் உள்ள பாராளுமன்ற வளாகத்தில் பிற்பகல் 1 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் அரசின் சில முக்கிய திட்டங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News